உயிர்களை காக்கும் உன்னத தானங்கள்!
மனிதன் செய்யும் மாபெரும் தானங்களில் முதன்மையானவை ரத்த தானம், உடல் உறுப்பு தானம் (கண் தானம் உள்பட). உடல் தானம் ஆகியவையே. மற்ற அனைத்து தானங்களும் பொருளாலோ. உழைப்பாலோ அளிக்கப்படுபவை. இந்த மூன்று தானங்களும் உயிரைச் சுமக்கும் உடலிலிருந்து அளிக்கப்படுபவை. அதன் மூலம் ஓர் உயிரையோ, பல உயிர்களையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ காப்பாற்ற வல்லவை.
உடல் தானம் வேறு; உறுப்பு தானம் வேறு! உடல் உறுப்பு தானத்திற்கும் உடல் தானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நம் உடலில் உள்ள உறுப்புகளை நம் காலத்துக்குப் பின்பு மற்றவர்களுடைய பயன்பாட்டுக்காகத் தானமாக வழங்குவது உடல் உறுப்பு தானம். நம் உடலையே மருத்துவக்கல்விக்காகத் தானமாக வழங்குவதுதான் உடல் தானம், மருத்துவ மாணவர்கள் முதலில் ஒரு மனித உடலைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு தான் மருத்துவத்தைப் பற்றி அவர்கள் படிக்க முடியும். உடல் தானம் வழங்குபவர்கள் அந்த மருத்துவ படிப்பு மாணவர்களுக்குத்தான் தங்கள் உடல்களைத் தானமாக வழங்குகிறார்கள்.
இயற்கை மரணமும் மூளைச்சாவும்
மூளைச் சாவு அடைந்திருந்தால் மட்டுமே இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியும். இயற்கை மரணமடைந்தால் கண் தானம் செய்யலாம். மற்ற முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியாது. ஆனால், இயற்கை மரணம் எய்தினால் உடல் தானம் செய்ய முடியும்.
தேவை மிக அதிகம்; விழிப்புணர்வு குறைவு!
உலகில் உறுப்பு தானத்தின் தேவை மிக அதிகமாகவே உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் உறுப்பு கிடைக்காததால் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேர் இறந்து போவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. பழைய நம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்கள் காரணமாக உறுப்பு தானம் செய்வதில் மக்களுக்கு தயக்கம் இருப்பதே இந்தப் பற்றாக்குறைக்குக் காரணம்.
ரத்த தானம் முதல் சிறுநீரக தானம் வரை
உயிரோடு இருக்கும்போது செய்யக்கூடிய தானங்களில் ரத்த தானம் குறிப்பிடத்தக்கது. பல்வேறு சேவை அமைப்புகளின் முயற்சியால் ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல செய்தி. நான் உயிரோடு இருக்கும்போதே நெருங்கிய உறவினருக்கு வழங்கும் ஒற்றைச் சிறுநீரகம் போன்றவை சிறப்பு வகை நாளங்கள்.
உறுப்பு தானம்… எங்கே தொடங்குவது?
எதிர்பாராவிதமாக மூளைச்சாவு அடையும்போது, குடும்பத்தினர் அவரின் ஒப்புதலுடன் உறுப்பு தானம் பெறலாம். இதன் வாயிலாக ஒரே நேரத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
இந்த தானம் இப்போது மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமாகத் தொடங்கி யிருக்கிறது. இறந்த பிறகு செய்யக்கூடிய உறுப்பு தானத்துக்கான முன்முயற்சிகளை நாம் இப்போதே செய்துவிடலாம். பல தன்னார்வ அமைப்புகள் ஆன்லைன் மூலம் பெறக்கூடிய உறுப்பு தான அட்டை வசதியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள். குடும்பத்தினரிடம் இந்த உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவிப்பது அவசியம். அப்போதுதான் இறந்த பின்னும் இந்த மண்ணில் வாழும் பாக்கியம் நம் உறுப்புகளுக்குக் கிடைக்கும்.
உறுப்பு தான அட்டை என்பது விருப்பத்தின் அடிப்படையில் பெறப்படுவதால், இதில் சட்டப் பிணைப்பு ஏதுமில்லை. ஆனால், உறுப்பு தான அட்டை பெறுவதுநாள் தானம் செய்வதற்கான அடிப்படை. இயற்கை மரணம் ஏற்பட்டால் குடும்பத்தினர் அருகில் உள்ள அரசாங்க / தனியார் மருத்துவமனையை அணுகி தானம் செய்யலாம். உறுப்புகளை பிறருக்குப் பொருத்தும் அல்லது பாதுகாக்கும் கூசதிகள் அங்கு உள்ளதா என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இயற்கை மரணத்தின்போது கருவிழி, சருமம், தசை நாண்கள், எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட வேண்டும்.
மூளைச்சாவு எப்படி உறுதிசெய்யப்படுகிறது?
உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையை அடைந்தால், அதை மூளைச் சாவு என்கிறோம். இந்த நிலையில் நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இதில் சம்பந்தப்படாத மற்றொரு மருத்துவர் என நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு ஒரு குறிப்பிட்ட செயல்முறை மூலம் ஒருவர் மூளை சாவை அடைந்துள்ளார் என உறுதிப்படுத்துவது வழக்கம்.
மூளையின் செயல்பாட்டை அறிந்துகொள்ள நரம்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள். மூளைத்தண்டின் செயல்பாடு ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட பின்னரே, இது உறுதி செய்யப்படும். இதன் பின் மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் பற்றி மருத்துவர்கள் விளக்கி வேண்டுகோள் விடுப்பார்கள்.
மூளை சாவு அடைந்த நபரை வென்டிலேட்டரில் வைப்பதால், உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுவதில்லை. குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு இதயம், நுரையீரல்கள், சிறுநீரகங்கள், சருமம், கருவிழி. தசை நாண்கள், எலும்புகள் உறுப்புகளைத் தானமாக அளிக்க முடியும்.
மருத்துவ முன்னேற்றத்தின் பலன்
அண்மைக் காலம் வரை உயிருடன் இருக்கும்போதே தானமாக தரக்கூடிய ஒரே உறுப்பாக சிறுநீரகம் மட்டுமே இருந்தது. மருத்துவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, இப்போது ஓர் உயிருள்ள நன்கொடையாளர் தன் சிறுநீரகங்களில் ஒன்று அல்லது ஒரு கல்லீரல் மடல் அல்லது நுரையீரல் அல்லது நுரையீரலின் ஒரு பகுதி அல்லது கணையத்தின் ஒரு பகுதி அல்லது குடலின் ஒரு பகுதியைக்கூட வாய்ப்பு உருவாகியுள்ளது. எனினும், சிறுநீரக தானம் தவிர மற்ற உறுப்புமாற்று சிகிச்சைகள் மிக அரிதாகவே செய்யப்படுகின்றன.
தானம் செய்யும் ஒருவர் இறந்த நான்கே நிமிடத்தில் ஒருவரின் உடல் அழுகத் தொடங்கிவிடும். ஒரு மணி நேரத்துக்குள் 2 மில்லிமீட்டர் வரை அழுகிவிடும். உறுப்புகள் இப்படி அழுகி, கெந்தோ, மண்ணில் மடிந்தோ வீணாகப் போவதற்குப் பதிலாக அவற்றைத் தானமாக அளிப்பதன் மூலம் எத்தனை உயிர்களுக்கு நாம் மறு உயிர்ப்பு அளிக்க முடியும்? ஆகவே, இது பற்றிச் சிந்திப்போம்!
- Dec 16, 2022