ஹெல்த் கஃபே – இதயத்துக்கு இதமான உணவுகள்
காவேரி மருத்துவமனை திருச்சி டயட்டீசியன் மகாலட்சுமி அளித்த முத்தான சத்து ரெசிபிகளைச் செய்து பார்த்து புகைப்படங்கள் எடுத்துத் தந்திருக்கிறார் ‘விருந்தோம்பல்’ சமையல்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்.
பேரிக்காய் பான்கேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 100g, பேரிக்காய் – 1, முட்டையின் வெள்ளைக்கரு -1, நாட்டு சர்க்கரை – 50g, ஏலக்காய் -2
செய்முறை:
தேவையான அளவு கோதுமை மாவு, பேரிக்காய், சிறிதளவு உப்பு, தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை, ஆடை நீக்கிய பால், முட்டையின் வெள்ளைக் கரு, ஏலக்காய்த் தூள் ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பின்பு இந்தக் கலவையினை தோசை தவாவில் வேகவைத்து பரிமாறவும்.
பேரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாலையில் சிற்றுண்டியாக எடுத்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து – 100 கிராமில்: கிலோ கலோரி -389 k cal, புரதம் – 18கி, நார்ச்சத்து -3கி, பொட்டாசியம் – 472 mg, சோடியம் – 12.1 mg, கொழுப்பு – 2.3கி
பீட்ரூட் கீரைப் பொரியல்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் கீரை – 100g, சின்ன வெங்காயம் – 30g, காய்ந்த மிளகாய் – 2 Nos, உப்பு- தேவையான அளவு, கடுகு தேவையான அளவு, உளுத்தம் பருப்பு – 5g
செய்முறை:
முதலில் வனலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சின்ன மிளகாய், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பீட்ரூட் கீரை சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.
பீட்ரூட் கீரை சேர்த்துக் கொண்டால் இதயம் வலுப்பெறும்.
ஊட்டச்சத்து – 100 கிராமில்: கிலோ கலோரி – 43kcal, புரதம் – 3.2g, சோடியம் – 226mg, பொட்டாசியம் – 762mg, மாவு சத்து – 4.3g, நார்ச்சத்து – 3.7g, கொழுப்பு – 0.3g
பசலைக்கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 30g, பசலைக்கீரை – 15g, பச்சை மிளகாய் -3, மஞ்சள் தூள் – தேவையான அளவு, இஞ்சி – 5g, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 5ml
செய்முறை:
தேவையான அளவு பசலைக்கீரை எடுத்து நறுக்கிக் கொள்ளவும், கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, பசலைக்கீரையை நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின்பு கோதுமை மாவில் பசலைக்கீரையினை சேர்த்து பிசைந்து வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். பின்பு தோசை தவாவில் பசலைக்கீரை சப்பாத்தியினை சுட்டு எடுத்து பரிமாறவும்.
பசலைக்கீரையில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் கே இருப்பதால் இதயம் ஆரோக்கியமாகச் செயல்படும்.
ஊட்டச்சத்து – 100 கிராமில்: கிலோ கலோரி – 156kcal, புரதம் – 4.1g, நார்ச்சத்து – 3.98g, பொட்டாசியம் – 257mg, சோடியம் – 116mg, கொழுப்பு 0.58g
பிரக்கோலி சூப்
தேவையான பொருட்கள்:
பிரக்கோலி -100g, இஞ்சி – 10g, பூண்டு – 10g, வெங்காயம் – 30g, மிளகு – 5g, எண்ணெய் – தேவையான அளவு, பிரியாணி இலை – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, மக்காச் சோளம் – 5g, பச்சை மிளகாய் – 2
செய்முறை:
குக்கரில் சிறிதளவு கடலை எண்ணெய் சேர்த்து கடுகு, பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, பிரக்கோலி சேர்த்து வதக்கவும். ஊறவைத்த மக்காச்சோளத்தை அரைத்து கொள்ளவும். பின்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பிரக்கோலியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இதயத்திலுள்ள ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஊட்டசத்து அளவு – 100ml அளவில்: கிலோ கலோரி – 54kcal, புரதம் 3.2g, நார்ச்சத்து – 2.8g, பொட்டாசியம் 316mg, சோடியம் – 35mg, கொழுப்பு – 0.6g
பல தானிய கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
ராகி – 20g, பாஜ்ரா – 20g, வரகு – 20g, சாமை – 20g, சோளம் – 20g, குதிரைவாலி – 20g, பாதாம் – 20g, நாட்டு சர்க்கரை – 100g, ஆலிவ் விதை 20g, ஏலக்காய் – 2
செய்முறை:
பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து, ஏலக்காய் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அந்தக் கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டை பிடிக்கவும். பிடித்த உருண்டையினை ஆவியில் வேக வைத்து பரிமாறவும். வாரம் 2 முறை இந்த கொழுக்கட்டை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க முடியும்.
ஊட்டச்சத்துக்கள் – 60 கிராமில்: கிலோ கலோரி-210.4kcal, புரதம் – 3.8g, நார்ச்சத்து – 5.5g, பொட்டாசியம் – 140mg, சோடியம் – 4.04mg, கொழுப்பு -3.1g
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
- Mar 28, 2024