சிறுநீரக கல் என்பது என்ன?
சிறுநீரக கல் என்பது சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கடினமான, படிகம் போன்ற கற்கள்.
சிறுநீரக கற்கள் எதனால் ஏற்படுகிறது?
- போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல்
- சிறுநீரகத்தில் கரைந்த தாதுக்கள் குவிதல்
- சிறுநீரகங்கள் அல்லது சிறுநீர்க்குழாயில் கால்சிஃபிகேஷன்
- சிறுநீர் வெளியேற்றம் குறைதல்
- உணவு பழக்க முறை மற்றும் பரம்பரை காரணிகள்
- மருந்து அல்லது சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்தல்
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்
- இடுப்பில் அல்லது தொடைக்கு மேல்ப்பக்கத்தில் தாங்க முடியாத வலி
- சிறுநீர் கழிக்கும் போது இரத்தத்தின் தடயங்கள்
- வாந்தி மற்றும் குமட்டல்
- சிறுநீர் கழிக்கும் போது சீழ்
- சிறுநீர் வெளியேற்றம் குறைதல்
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்
- சிறுநீர் கழிக்க தொடர்ந்து தூண்டுதல்
- காய்ச்சல்
- குளிர்
- தொற்று
இதையும் படியுங்கள்: Diet of a Kidney Disease Patient
சிறுநீரக கற்களுக்கான சிகிச்சை
- லேசான சந்தர்ப்பங்களில், கற்கள் சிறியதாக இருக்கும் போது, நிலையான நீர் பருகுதல் மூலம் அவற்றை வெளியேற்றலாம்
- லித்தோட்ரிப்சி - இந்த சிகிச்சையில், சிறுநீரகக் கல்லை சிறிய துண்டுகளாக உடைக்க ஒரு அதிர்ச்சி அலை அனுப்பப்படுகிறது (வலி மேலாண்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு சிகிச்சை தேவைப்படலாம்)
- மேற்கூறிய சிகிச்சைக்கு பதிலளிக்காத பெரிய கற்களுக்கு பெர்குடேனியஸ் நெஃப்ரோலிதோடோமி (பின்புறத்தில் உள்ள கீறல் மூலம் கல்லை அகற்றுதல்) அல்லது யூரிடெரோஸ்கோபிக் கல் அகற்றுதல் (சிறுநீர்க்குழாய்க்குள் மெல்லிய குழாயைச் செருகி கல்லை அகற்றுதல்) போன்ற அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வழிகள்
- போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் (ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கண்ணாடி தம்ளர்கள்)
- நாள் முழுவதும் தண்ணீர் பருகவும்
- ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவும்
- குறைந்த சோடியம் உணவை உட்கொள்ளுங்கள்
- புரதம் நிறைந்த உணவுகளை குறைக்கவும்
- கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் குறித்து மருத்துவரை அணுகவும்
சிறுநீரக கற்களுடன் தொடர்புடைய ஆபத்துகள்
- சிறுநீரக கற்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு மற்ற சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
சிறுநீரகம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதற்கான சிகிச்சை பெறவும்.
சிறுநீரக மருத்துவர் சென்னை | சிறுநீரக மருத்துவர் திருச்சி | சிறுநீரக மருத்துவர் சேலம்
- Jan 23, 2023