மகளிர்நல மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளிலான முன்னேற்றங்கள்
குறைந்தபட்ச-ஊடுருவும் அறுவைச்சிகிச்சைச் தொழில்நுட்பங்கள்
குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட அறுவைச்சிகிச்சை தொழில்நுட்பங்களான லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவைச்சிகிச்சை போன்றவை வழக்கமான மகளிர்நல மருத்துவ சிகிச்சைகள் ஆகிவிட்டன. இந்த தொழில்நுட்பங்கள் மூலம் கருப்பை நீக்கம், கருப்பை நீர்க்கட்டி அகற்றுதல் மற்றும் எண்டோமெட்ரியல் நீக்கம் போன்ற சிக்கலான செயல்முறைகளைச் செய்ய, சிறிய கீறல்கள் போதுமானது. இந்த தொழில்நுட்பங்கள் மிகவும் துல்லியமானவை, மேலும் அவற்றை பயன்படுத்துவதன் மூலம் இரத்த இழப்பு ஏற்படுவது குறைகிறது மற்றும் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் சேதமும் குறைகிறது. அறுவைச்சிகிச்சை செய்வதனால் நோயாளிக்கு ஏற்படும் தேவையற்ற வலி தவிர்க்கப்படுகிறது, மற்றும் விரைவில் குணமடையவும் முடிகிறது.
இந்த நடைமுறைகளைச் செய்யும் போது மருத்துவரிடம் நேரடி வீடியோ அல்லது ஸ்கேன் தரவு இருக்கும், அதனால் அறுவைச்சிகிச்சையை கச்சிதமாகச் செய்ய அது அவருக்கு உதவியாக இருக்கும். மகளிர்நல மருத்துவத்தைப் பொறுத்தவரை, வழக்கமான அறுவைச்சிகிச்சைகளை விட குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவைச்சிகிச்சை தொழில்நுட்பங்களில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.
கருவுறுதல் சிகிச்சையில் முன்னேற்றங்கள்
சமீபத்திய ஆண்டுகளில், இனப்பெருக்க மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோதனைக் கருத்தரித்தல் (IVF) மற்றும் இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் விந்தணு ஊசி (ICSI) ஆகியவை மேம்பாடு அடைந்திருக்கின்றன, அதனால் வெற்றிகரமான முடிவுகள் கிடைக்கின்றன. கருவுறுதல் மருத்துவத்திலும் AI ஒரு சுவாரஸ்யமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருத்துவதற்கு ஏற்ற கருக்களை தேர்ந்தெடுப்பதற்காக முந்தைய IVF சுழற்சிகளின் தரவுகளை AI மூலம் பகுப்பாய்வு செய்ய சில சோதனைகள் செய்யப்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.
பெண்களின் கருவுறுதல் மருத்துவத்தில் சமீபத்திய சுவாரஸ்யமான வளர்ச்சி உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை ஆகும். இதற்காக ராபமைசின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு பெண்ணின் கருவுறுதல் காலத்தை மேலும் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் திறன் கொண்டது என்று தெரியவந்துள்ளது. இது ஒரு சிறிய பைலட் ஆய்வை அடிப்படையாகக் கொண்டது, இதுவரை இது மதிப்பாய்வு செய்யப்படவில்லை, ஆனால் தரவுகள் மிகவும் நம்பிக்கை அளிக்கின்றன.
பெண் கருத்தடையில் புதுமைகள்
கருத்தடை ஆராய்ச்சித் துறையில் சமீபத்திய ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. IUDகள் மற்றும் பிற கருத்தடை உள்வைப்புகள் கர்ப்பத்தை தடுக்க சிறந்த கட்டுப்பாடு மற்றும் நம்பகமான பாதுகாப்பை வழங்குகின்றன. புதிய வடிவமைப்புகள் நீண்ட காலப் பாதுகாப்பு, அதிக சௌகரியம் மற்றும் குறைவான பக்க விளைவுகளை வழங்குகின்றன. இத்துறையில் இன்னொரு வரவேற்கத்தக்க புதிய வளர்ச்சி ஆண் ஹார்மோன் கருத்தடை மாத்திரை ஆகும். இந்த மாத்திரையைக் கொண்டு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் நம்பிக்கை அளிக்கின்றன. இந்த மாத்திரைகளை முயற்சித்த ஆண்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை! இந்த மாத்திரைகள் விந்தணு ஸ்டெம் செல்களை சேதப்படுத்தாமல் விந்தணு உற்பத்தியைத் தடுக்கின்றன. இது மீட்கக்கூடிய (ரிவர்ஸிபிள்) மற்றும் ஹார்மோன்-அல்லாத கருத்தடை முறையாகும், மேலும் இது ஆண் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்காது.
டெலிமெடிசின் முறையில் முன்னேற்றங்கள்
டெலிமெடிசின் என்பது நோயாளிக்கு உயர்தர மருத்துவ நிபுணத்துவம் வழங்கும் ஒரு புதிய, பிரபலமாகி வரும் முறையாகும். இது ஒரு நிகழ்நேர இருவழித் தொடர்பு சேனலாகும், இந்த முறையில், உலகின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பெண் நோயாளிகள் கூட சுகாதார வழங்குநர்களுடன் தொலைநிலையில் ஆலோசனை பெற்று, உயர்தர மருத்துவச் சேவையை அணுக முடியும். முக்கியமாக, கொடுமைப்படுத்தும் துணைவர்கள், குடும்பத்தினர் அல்லது மற்றவர்களின் குறுக்கீடு இல்லாமல் பெண்கள் தங்களின் உடலைப் பற்றி விவாதிக்க இது ஒரு பாதுகாப்பான வாய்ப்பை அளிக்கிறது.
பிசிஓடிக்கான(PCOD) சிகிச்சை
பிசிஓடி என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும், இது மாதவிடாய் காலத்தில் பெண்களை பாதிக்கிறது. பிசிஓடி இருக்கும் பெண்களுக்கு கருப்பையின் வெளிப்புற விளிம்புகளில் நீர்க்கட்டிகள் எனப்படும் திரவப் பைகள் உருவாகின்றன, இதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை. இது ஒழுங்கற்ற மற்றும் வலிமிகுந்த மாதவிடாய், எடை அதிகரிப்பு, முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் சில நேரங்களில் வழுக்கை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பண்டைய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட மலேரியா எதிர்ப்பு மருந்து பிசிஓடி-க்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம் என்று ஒரு புதிய ஆய்வு இப்போது பரிந்துரைத்துள்ளது.
- Sep 19, 2024