நமது மூளையை பாதிக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள்: தீர்வு காண்பது எப்படி?
நமது உடல் ஆரோக்கியம் பற்றிக் கேட்டால், அதற்கு ஒரிரு வரிகளில் விளக்கம் கூற முடியும். ஆரோக்கியமான மூளை எப்படி இருக்கும் என்று கேட்டால் என்ன சொல்வது?
ஒரு நபர் தன் சொந்த திறன்களை உணர்ந்து, வாழ்க்கைச் சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் அறிவாற்றல், உணர்ச்சி, உளவியல் மற்றும் நடத்தைச் செயல்பாட்டை மேம்படுத்தும் நிலையில் இருப்பதே ஆரோக்கியமான மூளைக்கு அடையாளம். இப்படி பல அரிய செயல்களைச் செய்யும் நமது மூளை இன்றைய சூழலில் இரண்டு காரணிகளால் பெரிதும் பாதிப்படைகிறது.
- பக்கவாதம்
- மூளைக்கட்டிகள்
பக்கவாதம் என்றால் என்ன?
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பால் வரும் நோயே பக்கவாத நோய். இது இரண்டு வகைப்படும்.
- ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வரும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக்
- ரத்தக் குழாய்கள் வெடித்து, மூளையில் ரத்தம் கசிந்து வருவது ஹெமரேஜிக் ஸ்ட்ரோக்
இஸ்கிமிக் ஸ்ட்ரோக்
ரத்தக் குழாய் அடைப்பு பொதுவாக சிலருக்கு 50 வயதில் ஏற்படலாம். வேறு சிலருக்கு 60 அல்லது 70 வயதில் நிகழலாம். ஆனால், இப்போது சில காரணங்களால், 40 எட்டாதவர்களைக்கூட இந்த அடைப்பு தாக்குகிறது.
ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைகளையும் மீறி உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், முறையான மருத்துவம் செய்யாமலிருப்பதாலும் இந்த அடைப்பு உருவாகும் அபாயம் உள்ளது. சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ள ரத்தம் ரத்தக் குழாய்களில் செல்வதால், இந்த அடைக்கும் தன்மை ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மது அருந்துதல், பரம்பரைக் காரணங்கள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படுகிறது.
ஹெமரேஜிக் ஸ்ட்ரோக்
ரத்த அழுத்த நோய் சரிவர கட்டுக்குள் வைக்கப்படாமல் இருந்தால், அதிக அழுத்தம் காரணமாக ரத்தக் குழாய்கள் வெடித்து, மூளையில் ரத்தக் கசிவு நிகழும். அணுக்களைச் சுற்றியிருக்கும் சுவர்களின் திடத்தன்மையை மது குறைத்து விடுவதால், இந்த நோய் மது அருந்துபவர்களுக்கு வரும் அபாயம் அதிகமாக உள்ளது.
அறிகுறிகள்
கை அல்லது கால்கள் செயலிழத்தல் மற்றும் மதமதப்பு, திடீரென தள்ளாட்டம், திடீரென பார்வையிழப்பு, திடிரென பேச்சில் தடுமாற்றம், திடிரென நினைவிழத்தல் போன்றவை பக்கவாத நோய்களின்
தொடர்புடைய வலைப்பதிவு: பக்கவாதம் என்றால் என்ன?
பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறை
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் வந்த மூன்று முதல் நான்கரை மணி நேரங்களுக்குள் உயிர் காக்கும் டி.பி.ஏ என்ற ஊசி மருந்தை செலுத்துவது நல்ல பலனைத் தரும். பின்னர் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தை தாண்டிவிட்டால் மருத்துவமனையில் சேர்த்து ஆஞ்சியோ மூலம் சிகிச்சை செய்து நோயிலிருந்து விடுபடலாம்.
மீண்டும் வராமல் தடுக்க...
ஆஸ்பிரின், குளோபிடோக்ரல், ஸ்டாடின் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும். உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
மூளைக்கட்டிகள்
மூளையிலுள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியையே மூளைக்கட்டிகளாகக் காண்கிறோம்.
மூளையில் தோன்றும் கட்டி முதல் நிலை, உறுப்புகளிலிருந்து மூளைக்குப் பரவும் கட்டி கட்டிகள் இருக்குமிடம், அதன் வளர்ச்சி உடலின் வேறு துணை நிலை, ஆகியவற்றைப் பொருத்து அறிகுறிகள் மாறுபடும். நீண்டநாள் தீராத தலைவலி, அதிகாலையில் வரும் தீவிர தலைவலி, வாந்தி, ஒரு பொருள் இரண்டாகத் தெரிவது, வலிப்பு நோய், கை, கால் பலவீனம்,பேச்சில் மாற்றம் மற்றும் சில நேரங்களில் சுய நினைவிழப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள்.
மூளைக்கட்டிகளை தீங்கற்ற கட்டிகள், புற்றுக்கட்டிகள் என்று இருவகைகளாக பிரிக்கலாம்.
சிறுவயதினருக்கு, சிறு மூளையில் கட்டிகள் வர வாய்ப்புள்ளது. முதியவர்களுக்கு பெரிய மூளை பகுதியில் கட்டிகள் வர வாய்ப்பு அதிகம். சுற்றுசூழல் காரணிகள், கதிர்வீச்சு காரணமாகவும் கட்டி ஏற்படலாம். சில கட்டிகள் பாரம்பரியத்தால் (மரபு வழி) வரக்கூடும். இப்போது நவீன முறையில் நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பின்றி அறுவை சிகிச்சை முறையில் தீர்வு காண முடியும்.
கட்டிகளின் தன்மையைப் பொறுத்து கதிர்வீச்சு மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் தீர்வு காண வாய்ப்பு அதிகம். மூளைக்கட்டிகளுக்கு உரிய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் எவ்வளவு விரைவாக நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகுவதே சிறந்த முடிவு!
டாக்டர் அருண் பழனி MBBS(JIPMER) MCh(NIMS)
மூளை, தண்டுவடம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்,
காவேரி மருத்துவமனை, சேலம்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
- Mar 29, 2023