உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா?
உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இதய நோயினால் இறக்கிறார்கள். ஆரோக்கிய இதயத்திற்கான சூழலை ஏற்படுத்துதல் – அதாவது வேலை செய்யும் இடம் மற்றும் வீட்டில் இதய நோய்கள் பாதிப்பில்லாத ஆரோக்கிய சூழலை உருவாக்குவதே இதைத் தவிர்க்கும் வழி. இதய நோய் ஒரு ஆட்கொல்லி நோய். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உட்கார்ந்தே பணியாற்றும் சூழ்நிலை, செல்போன், இணையதளம் போன்றவையே இதற்கு முக்கிய காரணங்கள். இந்த தாக்கம் இளைய தலைமுறையினரை அதிகம் முடக்குகிறது. தினமும் உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் எல்லா வயதினருக்கும் பயனளிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
- பணிகளை திட்டமிட்டு நேரத்துடன் செய்யவும்.
- உணவைத் தவிர்க்க வேண்டாம். ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாட்டை நேரம் தவறாமல் உண்ணவும்.
- நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்த்து, போதுமான நேரம் தூங்கவும்.
- இடைவிடாது வேலை செய்வது எதிர்மறை விளைவை உருவாக்கும். வேலை நேரம், குடும்ப நேரம், தனது நேரம் மற்றும் தூங்கும் நேரம் போன்றவற்றை தெளிவாக வகுத்துக்கொள்ளவும், உங்களது வேலை. உங்களது மற்ற நேரங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளவும்.
- ஒரே இடத்தில் அமர வேண்டாம். உங்கள் இடத்தில் அமர்ந்தே இருக்க வேண்டாம். அவ்வப்போது நின்று, நிதானமாக சிறுநடை நடக்கவும்.
வீட்டில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய உணவை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.
மொத்தமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதைக் காட்டிலும், சிறு சிறு அளவாகப் பிரித்து உண்பதாலும், வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுவதாலும் இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம்.
தொடர்புடைய வலைப்பதிவு: மனதை நலமாக வைத்து கொள்ளும் வழிகள்!
உணவு வாயிலாக உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
- உணவில் வெண்ணெய், நெய் குறைத்துக் கொள்ளவும், ஆலிவ் மற்றும் அரிசி எண்ணெய் பயன்படுத்தவும். குறைந்த அளவு சர்க்கரை பயன்படுத்தவும்.
- அதிக இனிப்பு உள்ள குளிர்பானங்கள், தின்பண்டங்களைத் தவிர்க்கவும்.
- குறைந்த அளவு உப்பை பயன்படுத்தவும். பாக்கெட் தின்பண்டங்களில் உப்பு அதிக அளவு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
- அதிக நார்ச்சத்து உள்ள உணவு, அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகைகளைப் பயன்படுத்தவும்.
- வீடு மற்றும் சுற்றுச்சூழலில் புகை பிடித்தலை நிறுத்தவும்.
- சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்.
- தோட்டவேலை, வீட்டு வேலை மற்றும் நடனப் பயிற்சியை மேற்கொள்ளவும்.
- வழக்கமான உடற்பயிற்சியை தினந்தோறும் மேற்கொள்ளவும்.
- உங்களது இதயநோய் ஆபத்தை கண்டறியவும். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிக்கவும்.
இதய நோயின் ஆபத்து காரணிகள்
- புகை பிடித்தல் – உயர் LDL அல்லது கெட்ட கொழுப்பு மற்றும் குறைந்த HDL அல்லது நல்ல கொழுப்பு
- கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம்.
- உடல் ரீதியான செயலற்ற நிலை
- உடல் பருமன்
- கட்டுப்பாடற்ற நீரிழிவுக் குறைபாடு (சர்க்கரை)
- கட்டுப்பாடற்ற மனஅழுத்தம் மற்றும் கோபம்
மேற்கண்ட காரணிகளிலிருந்து விடுபட்டால் இதய நோய் ஆபத்தை குறைக்கலாம். முக்கியமாக… உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்யுங்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சில செயல்களை மாற்றுவதன் மூலம் பெரிய நன்மையை அடையலாம்.
தொடர்புடைய வலைப்பதிவு: இதயம் காக்க இணைவோம் இன்றே!
இதய நோய் ஆபத்தை குறைக்க சில வழிகள்
புகை பிடிக்காதவரை விட புகை பிடிப்பவருக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதை நிறுத்தவும். புகை பிடிக்கத் தொடங்காமலே இருப்பது அதைவிட நல்லது. வீட்டில் புகை பிடிக்காமல் இருப்பவர்களுக்கும் (பாசிவ் ஸ்மோக்கர்ஸ்). புகை பிடிப்பவர்களால் ஏற்படும் புகையால், இதய நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே. இந்தத் தாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துதல்
கொழுப்பின் அளவு கூடும்போது இதய நோய் வரும் அபாயம் அதிகம். உங்களது மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும். HDL எனும் நல்ல கொழுப்பின் அளவு ஆண்களுக்கு 45mg/dl. பெண்களுக்கு 50mg/dl அல்லது அதற்கு மேலாக இருக்கலாம். ஆரோக்கியமானவர்களுக்கு LDL அல்லது கெட்ட கொழுப்பு 100mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும். குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த உப்பு உள்ள உணவுப் பொருட்கள் இதய நோயின் தாக்கத்தை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். மருந்துகளின் மூலம் மற்ற கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், – ரத்த அழுத்தத்தின் அளவு 140 (உயர்) மற்றும் 90 (தாழ்வு) என்பது சரியான அளவாகும். இந்த ரத்த அழுத்த அளவு ஒவ்வொருவருக்கும் வயது மற்றும் இதர காரணங்களால் வேறுபடும். ரத்த அழுத்தத்தை. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சீரான எடை, தேவைப்பட்டால் மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கவும்.
நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்தல்
நீரிழிவு என்ற சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அது இதயத்தைப் பாதித்து மாரடைப்பு மற்றும் இறப்பிற்கு வழிவகுக்கும். சர்க்கரை நோயை உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடை மற்றும் உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கவும்.உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்.
சுறுசுறுப்பாக இருத்தல்
தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தீவிர உடற்பயிற்சி நல்ல பலனளிக்கும். உடற்பயிற்சி என்பது ஏரோபிக், துரித நடை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், கயிறு குதித்தல் மற்றும் மித ஓட்டம் போன்றவையாக இருக்கலாம். நடப்பது உங்களது உடற்பயிற்சி என்றால் ஒரு நாளுக்கு 10,000 ஸ்டெப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உங்களுக்கு உகந்த உடற்பயிற்சியை மருத்துவருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும்.
சரியான உணவு
குறைந்த அளவு உப்பு, கொழுப்பு, இனிப்பு மற்றும் அதிக அளவு வைட்டமின்கள், ஊட்டச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ள உணவுகளை உட்கொள்வதால் இதய நோய் வரும் ஆபத்து மிகவும் குறைய வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
அதிக உடல் எடையுடன் இருப்பது உங்கள் இதயத்துக்கு கூடுதல் சிரமத்தைக் கொடுத்து, மற்ற பிரச்னைகளாகிய நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கூடுதலாக்கும். பல ஆராய்ச்சிகளில் உடல் பருமனே இதய நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது. சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியால் உடல் எடையைக் குறைத்து இதய நோயின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.
மன அழுத்தத்தை சமாளிக்கவும்
சரியாகக் கையாளப்படாத மன அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்பதால் கூடுதல் கவனம் அவசியம், மக்களே!
MBBS., MD.(General Medicine), DM(Cardio)
இதய நோய் சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சேலம்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai – Alwarpet/Vadapalani 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
- Nov 30, 2023