வெஜ் மோமோஸ்
என்னென்ன தேவை?
- அரிசி மாவு 100 கிராம்
- கேரட் 25 கிராம்
- பீன்ஸ் 25 கிராம்
- முட்டைக்கோஸ் 25 கிராம்
- வெங்காயம் 20 கிராம்
- ஸ்வீட் கார்ன் 20 கிராம்
- சில்லி ஃப்ளேக்ஸ் தாளிக்க
- எண்ணெய் தாளிக்க
எப்படிச் செய்வது?
மாவு தயாரிப்பு
- அரிசி மாவை இரண்டு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.
- ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக் கிளறி, கெட்டியான மாவாக வரும் வரை குறைந்த தீயில் கலந்து, தீயை அணைத்து, மூடியால் மூடி 5 நிமிடம் வைக்கவும்.
- 5 நிமிடங்களுக்குப் பிறகு, மூடியை அகற்றி, மாவை மஸ்லின் துணியால் மூடவும்.
- மாவை 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு அந்த மாவிலிருந்து உருண்டைகளை உருவாக்கவும்.
ஸ்டஃப்பிங் தயாரிப்பு
- ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு தாளித்து, அதில் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, நன்கு வதக்கி, சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து, நன்றாக வதக்கி, தீயை அணைத்து, தனியாக வைக்கவும்.
- மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து உருட்டி, ரோலிங் பான் உதவியுடன் தட்டையாக்கி, ஸ்டஃபிங்கை மையத்தில் வைத்து மோமோஸ் வடிவில் மடிக்கவும்.
- மோமோஸை ஒரு ஸ்டீமரில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
- ஸ்டீமரில் இருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
என்னென்ன சத்துக்கள்?
கலோரிகள்: 484.9 கிலோ கலோரி
புரதம்: 9.6 கிராம்
கொழுப்பு: 6.12 கிராம்
கார்போஹைட்ரேட்: 86 கிராம்
சோடியம்: 20.2 மி.கி
பொட்டாசியம்: 352 மி.கி.
பாஸ்பரஸ்: 157 மி.கி
பலன் என்ன?
நுண்ணூட்டச் சத்து நிறைந்த இந்த உணவு சிற்றுண்டிக்கு ஏற்றது. சோடியம், பொட்டாசியம் குறைவாகவெ உள்ளதால் சிறுநீரக நோயாளிகளுக்கு (அனைத்து நிலைகளுக்கும்) ஏற்றது.
- Mar 29, 2023